இலங்கையில் நாடு முழுவதும் இராணுவத்தை நிறுத்த வேண்டும்!
வடக்கு, கிழக்கு பகுதிகளில் காணப்படும் இராணுவ பிரசன்னத்தை இலங்கையின் ஏனைய மாவட்டங்களுக்கும் நகரவைக்க இலங்கை நடவடிக்கை எடுக்கும் என தாம் நம்புவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரென்கின் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் இலங்கையில் மீண்டும் செயற்பட முனைந்தால் மேற்கூறிய விடயம் தடையாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு, கிழக்கை போன்று ஏனைய பகுதிகளிலும் இராணுவ பிரசன்னத்தில் சமநிலை பேணப்படாவிட்டால் வன்னி மற்றும் யாழ். பகுதிகளில் அதிக இராணுவம் இருப்பது வெளிப்படையாகத் தெரியவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை முழுவதும் ஒரே வகையான இராணுவ முகாம்கள் பராமரிக்கப்படுவது அவசியம் என ஜோன் ரென்கின் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply