சரத் பொன் சேகா வெளியில் வந்து விட்டார் ஆனால் எமது இளைஞர்கள் சிறையில் வாடி வருகின்றனர் : மனோ கணேசன்

சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை எதிர்வரும் ஜூன் மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர் மேற் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் எமது போராட்டம் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அரசுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன்.

சிறைகளில் எவ்வித விசாரணைகளும் இன்றி வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் மக்கள் எமது மண்ணில் சுதந்திரமாக வாழ்வதற்கு சகல உரிமைகளும் உண்டு. ஆனால் இந்த அரசு அந்த உரிமைகளைத் திட்டமிட்டு மறுத்து வருகின்றது. அரசியல் கைதியாக கைது செய்யப்பட்ட சரத் பொன் சேகா இன்று வெளியில் வந்து விட்டார். ஆனால் எமது இளைஞர்கள் சிறையில் வாடி வருகின்றனர்.

சிங்கள மக்களுக்கு ஒரு நியாயம். தமிழ் மக்களுக்கு ஒருவகை நியாயமா என்று கேட்கவிரும்புகின்றேன். நாட்டிலுள்ள அனைவருக்கும் தமது பிள்ளைகள் கணவன் மார்கள் மற்றும் சகோதரர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வதற்கு சகல உரிமைகளும் உண்டு. அந்த உரிமையை அனுபவிக்க அரசு வழிசமைக்க வேண்டும்.

அரச சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒரு மாத கால அவகாசம் உள்ளது. அதற்கு முன் அவர்களை விடுவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து அவர்களின் விடுதலையை வலியுறுத்தி எதிர் வரும் ஜூன் மாதம் 24 ஆம் திகதி மா பெரும் ஜன நாயக போராட்டத்தினை முன்னெடுப்போம் என்று சூளுரைத்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply