பரித்தானிய குழு நாளை யாழ் செல்கிறது

பத்துப் பேர் அடங்கிய பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இரண்டு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை வடமாகாணத்துக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு அவர்கள் விஜயம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியர்த்தப்பட்ட அரியாலை, சாவகச்சேரி ஆகிய பகுதிகளுக்கும் அவர்கள் சென்று பார்வையிடவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண போதனா மருத்துவமனைக்கும் விஜயம் செய்யும் பிரித்தானிய குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர், வர்த்தக சுமூகத்தினர் உள்ளிட்ட பலரை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்ணி வெடி அகற்றுமு; பணிகளை பார்வையிடவுள்ளதுடன் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளுக்கும் சென்று  பார்வையிடவுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply