பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் அமைச்சர் பஷில் சந்திப்பு
தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் அமைச்சர் பஷில் ராஜபக்ஸவுடன் இன்று கலந்துரையாடவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவிக்கின்றது.
இந்தக் கலந்துரையாடலின் ஊடாக தமது பிரச்சினைகளுக்கு நியாயமான பதிலொன்று கிடைக்கும் என தாம் நம்புவதாக சம்மேளனத்தின் செயலாளர் கலாநிதி டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பு சுமார் மூன்று வாரங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வொன்றை வழங்கும் பட்சத்தில் தாம் பணிப் பகிஷ்கரிப்பை கைவிடுவதாக, அரசாங்கத்திடம் கடந்த முன்று வாரங்களாக தெரிவித்திருந்த போதிலும், அவர்கள் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையிலேயே அமைச்சர் பஷில் ராஜபக்ஸ இன்றைய தினம் கலந்துரையாடல்களுக்கு அழைப்பை விடுத்துள்ளதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் செயலாளர் கலாநிதி டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply