ஈரான் மீது மேலும் ஒரு பொருளாதாரத் தடை!
ஈரான் மீது அமெரிக்கா மேலும் ஒரு பொருளாதாரத்தடையை விதித்துள்ளது. இதனால் ஈரான் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் எரிசக்தித்துறையில் பெரும் இழப்பீட்டை சந்திக்க உள்ளது.
அணு ஆயுதங்கள் தயாரிப்பதாகவும், அணுசோதனை நடத்துவதாகவும் குற்றம்சுமத்தி ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத்தடையை விதித்திருந்தது.
இதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஆதரவளித்துள்ளன. எனினும் ஈரான் இதனை மறுத்து வருகிறது.
ஈரான் தனது நாட்டிலிருந்து மசகு எண்ணெயை பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து தனது பொருளாதாரத்தினை வளமாக்கி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா, ஈரானின் எண்ணெய் வர்த்தகம், எரிசக்தித்துறை ஆகியவற்றின் மீது புதிய தடையை விதித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி பெரக் ஒபாமா கருத்துவெளியிடுகையில், ஈரான் மீது ஏற்கனவே பொருளாதாத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதுடன், எண்ணெய் வர்த்தகம் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஈரானின் பெட்ரோலியப் பொருட்களை கொள்வனவு செய்யவும், இறக்குமதி செய்யவும் தடைவிதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
அமெரிக்காவின் இந்த தீர்மானம் ஈரானுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply