இலங்கையில் சீனா! இந்திய தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்
இலங்கையில் சீனாவின் பிரசன்னம் இந்திய தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சீனாவின் பிரசன்னம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 12ம் திகதி நடைபெறவுள்ள டொசோ மாநாட்டில் கலந்துரையாடப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனுஷ்கோடிக்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில் சீனாவின் உதவியுடன் இலங்கை தற்காலிக முகாம் ஒன்றை அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான முகாம்கள் இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மத்திய அரசாங்கத்திற்கு விளக்கமளிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இன முறுகல் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் நோக்கில் டொசோ அமைப்பு இயங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர்களான ஷரத் பவார், பாரூக் அப்துல்லாஹ், ஜனதா தளக் கட்சியின் தலைவர் சரட் யாதவ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் டொசோ மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply