யாழில் காந்திசிலை உடைப்பு சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் – இந்தியா

யாழ்ப்பாணத்தில் சேதமாக்கப்பட்ட மகாத்மா காந்தியின் உருவச்சிலையை மீளவும் புனரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், சிலையை சேதப்படுத்திய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

அரியாலை சனசமூக நிலைய முன்றலில் இருந்த மகாத்மா காந்தி சிலை கடந்த சனிக்கிழமை இரவு சேதமாக்கப்பட்டது.

அண்மைக்காலத்தில் இலங்கையில் சேதமாக்கப்பட்ட மகாத்மா காந்தியின் இரண்டாவது சிலை இதுவாகும்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்  இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரக  அதிகாரி மகாலிங்கம் இந்தச் சிலையைத் திறந்து வைத்திருந்தார்.

இந்த சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகமவுடன் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா பேசியுள்ளார்.

இதன்போதே காந்தி சிலையை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறும், குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி மகாலிங்கம் யாழ். அரச அதிபர் மற்றும் யாழ்.மாநகர முதல்வர் ஆகியோரை சந்தித்து இதுபற்றி  முறையிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply