பாகிஸ்தானில் இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர் பொலிஸரால் சுட்டுக்கொலை

பாகிஸ்தான் லாகூரில் 2009ம் ஆண்டு இலங்கை அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் பஞ்சாப் மாநில பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியே இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லாகூர் நகரில் இருந்து 400 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மல்டன் Ghazi Ghat பாலத்திற்கு அருகில் பொலிஸார் வாகனங்களை சோதனை செய்துள்ளனர்.

இதன்போது பொது பயணிகள் பஸ் ஒன்றை சோதனை செய்தவேளை, அதிலிருந்து ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்துல் கபார் கைஸ்ராணி எனப்படும் சைப்புல்லா கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவருடைய பயணப் பொதியில் இருந்து ஒரு கைக்குண்டும் இரு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சைப்புல்லா பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள தெஹிரிக் -ஈ.-தலிபான் தீவிரவாத இயக்கத்தின் உறுப்பினர் என தெரிய வந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply