அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த அகதிகள் படகு விபத்தில்

67 பயணிகளை அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றிச் சென்ற அகதிகள் படகொன்று கொக்கோஸ் தீவுக்கருகில் பாறையொன்றில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அகதிப் படகிலிருந்து நான்கு ஆண்கள் (தமிழர்கள்) கொக்கோஸ் தீவை நீந்திக் கரையேறியுள்ளனர். இவ்வாறு கரையை அடைந்தவர்களைப் பார்த்த கொக்கோஸ் தீவைச் சேர்ந்த ஜக் ஓ டோனல்ட் என்பவர், அவர்களுக்கு உணவு கொடுத்து உதவியுள்ளார்.

கரையைச் சேர்ந்த நால்வரும், கொக்கோஸ் வாசியிடம், படகு பாறையில் சிக்கிக் கொண்டமை பற்றியும் அவர்களைக் காப்பாற்றுமாறும் தெரிவித்துள்ளனர்.

ஜக் ஓ டோனல்ட் , பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, ஏனைய புகலிடக் கோரிக்கையாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டு கிறிஸ்மஸ் தீவு முகாமுக்கு மாற்றப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply