நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமெரிக்கா வரவேற்பு
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரை குறித்து இலங்கையால் தேசிய செயற்திட்டம் வெளியிடப்பட்டமையை ஐக்கிய அமெரிக்கா வரவேற்றுள்ளது.
இது குறித்து கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில்,
இலங்கை அரசாங்கம், தேசிய செயற்திட்டத்தை வெளியிட்டமையை ஐக்கிய அமெரிக்கா வரவேற்கின்றது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் முழுமையான நடைமுறைப்படுத்துதலை நாம் நீண்ட நாட்களாக ஊக்குவித்து வந்துள்ளோம்.
தேசிய செயற்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், நீண்டகால நல்லிணக்கம் மற்றும் நிலையான சமாதானம் ஆகியவற்றை மேலும் வலுவூட்டி அனைத்து குடிமக்களுக்கும் நன்மை பயக்கும் என நாம் நம்புகின்றோம என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply