முல்லைத்தீவு செம்மன்குன்றுக் கிராமத்தில் ஒரு தொகுதி மக்கள் மீள் குடியேற்றம்

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிலுள்ள அம்பலவன் பொக்கணை செம்மன்குன்றுக் கிராமத்தில் மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகள் இன்று (02) வியாழக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத் திட்டமிடல் பணிமனை அதிகாரி தெரிவித்தார்.

இந்தப் பிரதேசத்தில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேர் மீள் குடியேற்றப் படவுள்ளதாகவும் இவர்களது விபரங்கள் செட்டிக்குளம் மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீள் குடியேற்றம் செய்யப்படவுள்ளவர்கள் பதிவுகளின் பின்னர் இரணைப்பாலையில் தங்கவைக்கப்பட்டு தமது சொந்த இடங்களிற்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்தப் பிரதேசத்தில் ஜூன் மாதம் 30ஆம் திகதி வரையில் 11ஆயிரத்து 384 குடும்பங்களைச் சேர்ந்த 35ஆயிரத்து 953 பேர் இதுவரையில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டப்புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply