இந்திய – சீனாவுக்கிடையில் ஏற்றுமதி தொடர்பினை அதிகரித்துக் கொள்ளுமாறு இலங்கைக்கு வலியுறுத்தல்

இந்திய மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனான ஏற்றுதி தொடர்பினை அதிகரித்துக் கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கையை வலியுறுத்தியுள்ளது.

இதன் மூலம் அதிக அந்நிய செலாவணியை அதிகரித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த வரும் இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியில் 17.8 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டது.

எனினும் கடந்த 2001ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, இது வீழ்ச்சியடைந்து காணப்படுகிறது. 2001ம் ஆண:டு 33 சதவீதமான உள்நாட்டு உற்பத்திகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

இது தொடர்பில் கருத்த வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பிரதிநிதி கோசி மாத்தாய், நாணய மாற்று விகிதங்களின் பெறுதி இறக்கம், அதிகரித்த மின்சார செலவு, தொழிலாளர் சட்டங்கள் போன்றவை இந்த முறை உள்நாட்டு உற்பத்தியை பாதித்துள்ளதாக தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply