இலங்கையின் முதலீ்ட்டு வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம்
இலங்கை வந்துள்ள பிரித்தானிய கொன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
இந்த சந்திப்பு கண்டியிலுள்ள ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையில் நிர்மாணிக்கப்படும் புதிய பாலங்களுக்கு பிரித்தானியா ஏற்கனவே பங்களிப்பு வழங்கியுள்ள நிலையில் அந்த நாட்டின் முதலீட்டாளர்களுக்கு நாட்டில் காணப்படுகின்ற முதலீ்ட்டு வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி இந்த பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
இதேவேளை யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி செயற்பாடுகள், அமைதியை நிலைநாட்டுதல் மற்றும் இயல்பு வாழ்க்கையை கட்டியெழுப்புதல் ஆகிய செயற்பாடுகள் குறித்தும் பிரித்தானிய பாராளுமன்ற குழுவினருக்கு இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் உள்ளடங்கியுள்ள பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வழிமுறைகள் குறித்தும் ஜனாதிபதி பிரித்தானிய கொன்சர்வேட்டிவ் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினருக்கு எடுத்துக் கூறியுள்ளார்.
வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் அரசாங்கத்தினால் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதைப் பார்வையிடும் பொருட்டு அங்கு விஜயம் செய்யுமாறு பிரித்தானிய பிரதிநிதிகள் குழுவினருக்கு இதன்போது ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆறாம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் பிரித்தானிய கொன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு வடக்கு, கிழக்கு பிரதேசங்கள், ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல சர்வதேச விமான நிலையம் மற்றும் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரதான அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிடவுள்ளார்.
அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோரும் இந்த சந்திப்பின் போது கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply