பிரித்தானிய குழுவினர் யாழில் நேரடி மக்கள் தொடர்பில்

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளனர்.

இவர்கள் நேற்று மாலை 5 மணியளவில் கடந்த வருடம் மீள் குடியேற்றப்பட்ட அரியாலை நாவலடி கிராம மக்களை சந்தித்து அவ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றியும் அவர்களின் தேவைகள் பற்றியும் நேரில் கேட்டு அறிந்து கொண்டனர்.

இதேவேளை பிரித்தானிய பாராளுமன்ற குழுவினர் இன்று யாழ் வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்கள்.

அங்கு பதில் பணிப்பாளர் DR .பவானந்தராஜா மற்றும் யாழ் வைத்தியசாலை அபிவிருத்தி குழு தலைவர் போராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை ஆகியோரை சந்தித்தனர்.

அவர்களிடம் வைத்தியசாலையின் தேவைகள் குறித்தும் வசதிகள் குறித்தும் கேட்டு அறிந்து கொண்டனர்.

பின்னர் வைத்தியசாலையையும் நோயாளர் விடுத்திகளையும் பார்வையிட்டு சென்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply