பள்ளிவாயல்களில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் 22 ஆம் ஆண்டு நினைவு
காத்தான்குடி பள்ளிவாயல்களில் கடந்த 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட 103 முஸ்லிம்களினதும் 22வது ஆண்டு நினைவு தினம் இன்று காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு நகரங்களில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இச்சம்பவத்தின் போது 103 பேர் காத்தான்குடி மீரா ஜூம்ஆ பள்ளிவாயில் மற்றும் ஹூஸைனயா பள்ளிவாயிலில் படுகொலை செய்யப்பட்டனர்.
புனித இரவு நேரத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தியதன் காரணமாக அவர்கள் ஸ்தலத்திலேயே படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் தொழுகையிலிருந்த 265 பேர் படுகாயமடைந்து அங்கவீனர்கள் ஆக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தின் 22வது நினைவு தினமான இன்று காத்தான்குடி நகரில் பூரண துக்கதினம் அனுஷ்டிக்கப்படுவதுடன் கடைகள், வங்கிகள் மூடப்பட்டிருந்தன.
நகரில் வெள்ளைக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன. பள்ளிவாயில்களில் விஷேட பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம் பெற்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply