டெசோ மாநாடு! இதுவரை முடிவில்லை
தமிழீழ ஆதரவாளர்களது, டெசோ மாநாட்டில் கலந்துக் கொள்வது தொடர்பில் கட்சி மட்டத்தில் பேசி தீர்மானிக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.
மாவை சேனாதிராஜா கடந்த வாரம் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியை சந்தித்து, டெசோ மாநாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்வர் என எதிர்பார்க்கப்பட்டது.
இது குறித்து விரைவில் கட்சியின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply