குடிநீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது
நிலவுகின்ற வரட்சியான காலநிலை காரணமாக குடிநீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவிக்கின்றது.
குழாய் நீருக்கான கேள்வி தற்போது அதிகரித்துள்ளதுடன், நீர்த் தேக்கங்களில் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய நீரின் அளவிலும் துரித வீழ்ச்சி ஏற்பட்டு வருவதாக நீர்வழங்கல் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலைமையை கவனத்திற்கொண்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் குடிநீரை அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் பயன்படுத்துமாறு அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply