தம்புள்ளை புண்ணிய பூமியின் அபிவிருத்தி நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு
தம்புள்ளை நகர அபிவிருத்தி மற்றும் புண்ணிய பூமி அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ரங்கிரி தம்புள்ளை ரஜமகா விஹாரைக்கு சென்று இன்றையதினம் வழிபாடுகளில் ஈடுபட்டதை அடுத்தே ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.
தம்புள்ளை நகர அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ரங்கிரி தம்புள்ளை விஹாராதிபதி இனாமலுவே ஸ்ரீ சுமங்கல தேரர், ஜனாதிபதியிடம் இதன்போது கோரிக்கைவிடுத்துள்ளார்.
நகர அபிவிருத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் அதில் சில குறைபாடுகள் உள்ளதாக சுமங்கல தேரர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து தொலைபேசி ஊடாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரை தொடர்புகொண்ட ஜனாதிபதி அந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இன்று முற்பகல் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அதன் பின்னர் அங்கு வருகை தந்திருந்த பக்தர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.
இதனையடுத்து அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களின் மஹாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஜனாதிபதி ஆசிபெற்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply