இந்தியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதியை அதிகரிப்பது வணிக மாநாட்டில் கவனம்

இந்திய- இலங்கை வணிகத்தை ஊக்குவிக்கும் முகமான இரு நாட்டு வணிகத் தலைவர்களின் மாநாடு ஒன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.

இந்திய வணிக அமைச்சர் ஆனந்த் ஷர்மா மற்றும் இலங்கை வணிக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியர் தலைமையிலான இந்த மாநாட்டில் இலங்கை மற்றும் இந்திய வணிக நிறுவனங்களின் முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வணிகத்தை ஊக்குவிப்பதற்கான பல திட்டங்கள் குறித்து இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்டதாகவும், தற்போது 5 பில்லியன் டொலர்களாக இருக்கும் இந்த வணிகத்தை அடுத்த மூன்று வருடங்களில் இருமடங்காக்குவதற்கான திட்டங்கள் குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டதாகவும் இலங்கை வணிக அமைச்சர் ரிசாத் பதியுதீன் கூறினார்.

இந்தியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டதாகவும், அதற்கு இந்தியாவின் உதவி கிடைக்கும் என்று இந்திய வணிக அமைச்சர் உறுதி வங்கியதாகவும் ரிஷாத் கூறினார்.

இலங்கையில் 5 பில்லியன் டாலர்கள் பெறுமதியான புதிய முதலீட்டை செய்யவும் இந்தியா முன்வந்துள்ளதாகவும் இலங்கை அமைச்சர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply