வாக்குறுதியை காப்பாற்ற ரயிலில் பயணம் செய்த பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் ஜனாதிபதிக இருந்த நிகோலஸ் சர்கோசி அரசு பணத்தை ஆடம்பரமாக செலவு செய்தார். கோடிக்கணக்கான ரூபாயை செலவிட்டு பெரும் சர்ச்சைக்கு ஆளானார்.

ஆனால் சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, அரசு பணத்தை சிக்கனமாக செலவு செய்வேன் என்று பிரான்காய்ஸ் ஹோலண்ட் வாக்குறுதி அளித்தார். அதிபரான அவர், ‘மிஸ்டர் எளிமை’ என்று பெயர் எடுக்க முடிந்த வரை செலவுகளை குறைத்து வருகிறார்.

இந்நிலையில் விடுமுறைக்காக பாரிசில் இருந்து போர்ட் டி பிரகான்கன் நகருக்கு நேற்று ரயிலில் சென்றார் பிரான்காய்ஸ். அவருடன் காதலி வெலரி டிரியர்வீலரும் சென்றார். இருவரும் முதல் வகுப்பில் பயணம் செய்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply