பிலிப்பைன்ஸ் – தைவான் புயல் மழை காரணமாக 42 பேர் பலி! 3 லட்சம் மக்கள் பாதிப்பு
பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் நாட்டில் சாவ்லா புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. கடும் சூறாவளி காற்றும் வீசி வருவதால் சாலைகளில் விபத்து அதிகரித்துள்ளது.
புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி பிலிப்பைன்சில் 37 பேரும், தைவானில் 5 பேரும் பலியாகினர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசித்த சுமார் 3 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 4 பேரைக் காணவில்லை. அவர்களும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சீனாவின் தென்கிழக்கு கடற்பகுதியில் மையம் கொண்டிருந்த சாவ்லா புயல் நேற்று காலையில் கரையைக் கடந்தது.
இதனால் மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. தொடர்ந்து கனமழையும் பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
தண்ணீர் கசிவு ஏற்பட்டதையடுத்து பிலிப்பைன்சில் உள்ள தங்கச் சுரங்கம் மூடப்பட்டது. கிங்டோ நகரில் உள்ள சர்வதேச விமான நிலையமும் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அங்கிருந்து கிளம்பும் 29 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டன.
இதேபோல் தரைவழி போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply