இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலிய செல்ல முயற்சித்த ஆறு பேர் கைது
இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்க தயாரான இலங்கையர்கள் ஆறுவர் பொலிஸரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வீடு ஒன்றில் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றதை அடுத்து அந்த வீட்டை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.
இதன்போது அங்கிருந்து இருவர் தப்பியோடியுள்ளார். கைது செய்யப்பட்ட ஆறு பேரில், ஆறு வயதுடைய சிறுவன் ஒருவனும் இருந்துள்ளான்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் நந்தகோபன், தயாகரன், மெத்தியூஸ், சசிதரன், இந்திரஜித் ஆகிய ஐவர் பற்றி விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நந்தகோபன், தயாகரன் ஆகியோர் இலங்கையிலிருந்து புதுச்சேரிக்கு சென்றுள்ளனர். ஏனைய மூவரும் சிவகங்கை அகதிகள் முகாமில் இருந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இவ்வொருவரும் அவுஸ்திரேலியா செல்வதற்காக தளா 75,000 தொடக்கம் ஒரு இலட்சம் இந்திய ரூபாய்களை செலுத்தியுள்ளதாக பொலிஸாரின் முதற் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply