ரணில் உளவுத் தகவல்கள் வழங்கவில்லை
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உளவுத் தகவல்களை வழங்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
1994ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் காமினி திசாநாயக்கவின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பிலான உளவுத் தகவல்களை ரணில், சந்திரிக்காவிற்கு வழங்கியதாக அமைச்சர் மைத்திரிபாலசிறிசேன அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மறுத்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி ஏற்றுக்கொண்ட போது, வாழ்த்து தெரிவிக்கும் முகமாகவே அவரை சந்தித்ததாக சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது வேறு எந்தவித விடயங்கள் தொடர்பிலும் கவனத்திற் கொள்ளவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply