தேர்தல் ஆணையாளரின் உத்தரவுகளை பொலிஸார் மதிப்பதில்லை
தேர்தல் ஆணையாளரினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகைள பொலிஸார் மதித்துச் செயற்படவில்லை என கபே என்னும் முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஏறாவூர் தபால் நிலையத்தின் திறப்புக்களை ஒப்படைக்குமாறு ஏறாவூர் பொலிஸாரருக்கு தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவினை காவல்துறையினர் மதித்துச் செயற்படவில்லை என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் நிறைவடைந்ததன் பின்னர் குறித்த தபால் நிலையத்தின் திறப்புக்களை தபால் திணைக்களத்திடம் ஒப்படைப்பதாக அறிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும், தேர்தல் காலத்தில் தேர்தல் ஆணையாளரின் உத்தரவுகளையே காவல்துறையினர் பின்பற்ற வேண்டுமென கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply