மத்திய மாகாண சுகாதார அமைச்சருக்கு விளக்கமறியல்
மத்திய மாகாண சுகாதார அமைச்சர் சுனில் அமரதுங்க கண்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய மாகாண சுகாதார அமைச்சர், மாகாணத்தின் சமூக மருத்துவ விசேட நிபுணர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித்த ரோஹண தெரிவித்தார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சர் சுனில் அமரதுங்க கண்டி நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 6 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியளில் வைக்க நீதவான் பணிப்புரை விடுத்தார்.
முன்னதாக, மருத்துவ நிபுணரை தாக்கிய சம்பத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய மாகாண மருத்துவர்கள் நேற்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply