தரமற்ற டீசலை கொண்ட மற்றுமொரு எண்ணை கப்பல் இலங்கையை நோக்கி வருகிறது
தரமற்ற டீசலை இலங்கைக்கு இறக்குதி செய்யும் விடோல் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட மற்றுமொரு எண்ணை கப்பல் இலங்கையை வருவதாக கனிய எண்ணெய் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய சேவையாளர் சங்கத்தின் கனிய எண்ணை கூட்டுத்தாபனத்தின் பிரதான செயலாளர் ஆனந்த பாலித இதனை தெரிவித்துள்ளார்.
இது மின்சார உற்பத்திக்காக தேவைப்பாட்டினை பூர்தி செய்வதற்காக கொண்டு வரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த எண்ணை தொடர்பில் உரிய சோதனைகள் மேற்கொள்ளாது பவனைக்கு கொள்வது பாதிப்புக்களை விளைவிக்கும் எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.
இந்த நிலையில் இவ்வாறு தரங்குறைத்த எண்ணை இறக்குமதியால் பல பிரச்சினைகள் தோற்றும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயிலும் இலங்கை கனிய எண்ணை வள கூட்டுத்தாபனம் உரிய சோதனைகளின் பின்னரே எரிபொருட்களை பயன்பட்டுக்கு கொள்ளும் என்று அதன் பணிப்பாளர் சீ பி சமரவீர தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply