மட்டக்களப்பில் விடுதலைப் புலிகள் காலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஐந்து கைக்குண்டுகளை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப் புலனாய்வுத் துறையினர் மீட்டுள்ளனர்.

தமக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் இருதயபுரம் பொதுமயானத்தில் இருந்து இந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப் புலனாய்வுத் துறையின் பொறுப்பதிகாரி ரஹீம் தெரிவித்தார்.

இக்கைக்குண்டுகள் விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரிகளான லிவுலியந்த, சுகியான், மஜித்,ரத்நாயக்க, பிரியங்கர ஆகியோர் கொண்ட குழுவினரே இக்கைக்குண்டுகளை மீட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட கைக்குண்டுகள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றினை செயலிழக்கச்செய்யும் பணிகள் இடம்பெற்றுவருவதாகவும் ரஹீம் தெரிவித்தார்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னரும் அப்பகுதியில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply