இலங்கை துறைமுகங்களில் இந்திய தனியார் துறைகள் முதலீடு – ஆனந்த் சர்மா
போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் முன்னேற்றதிற்கு துறைமுகம், எண்ணெய் மற்றும் எரிவாயு பகுப்பாய்வு ஆகிய துறைகளில் இந்திய தனியார் துறைகள் முதலீடு செய்யும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியன் சோ வர்த்தக மாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய ஆனந்த் சர்மா,
போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா உதவும். போரில் இடம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் அவர்களின் இடங்களில் குடியேற்றுவது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக இந்தியா வீடு கட்டித் தருவதை இலங்கை வரவேற்றுள்ளது. இலங்கையில் உள்ள துறைமுகங்களை மேம்படுத்துவதில் இந்திய நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டும்.
இது தவிர எண்ணெய் மற்றும் எரிவாயு பகுப்பாய்விலும் இந்திய நிறுவனங்கள் முக்கிய பங்காற்றும்.
இலங்கையில் முதலீடு செய்ய விரும்பும் தனியார் நிறுவனங்களுக்கு கடன் அளிக்குமாறு இந்திய வங்கிகளை மத்திய அரசு கேட்டுக்கொள்ளும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply