மனித உறுப்புகள் கடத்தியவர்கள் கைது

மனித உடலில் மாற்று அறுவை சிகிச்சைக்காக தேவைப்படும் உடல் உறுப்புக்களை சட்ட விரோதமாக சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என 142 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தவிர, சட்ட விரோதமாக உடல் உறுப்புக்களை கடத்திக் கொண்டு வருவதற்காக பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த நூற்றுக்கும் அதிகமானவர்களை சீன காவல்துறையினர் மீட்டுள்ளதாக சீன சிங்ஹூவா தெரிவித்துள்ளது.

இதேவேளைஇ சீன மருத்துவ புள்ளி விபரங்களுக்கு அமையஇ தற்போது 15 லட்சம் சீனர்களுக்கு மாற்று உறுப்புக்கள் அவசரமாக தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால், வருடத்திற்கு மாற்று உறுப்பு அறுவை சிகிச்சைகள் 10 ஆயிரம் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்று உறுப்புக்களை வழங்க முன் வருவோர் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதனால், உடல் உறுப்பு கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பெரும் பணம் லாபமாக பெறுவதாகவும் சிங்ஹூவா செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply