ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் பிரதிநிதிகள் குழு விரைவில் இலங்கை வருகிறது

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் பிரதிநிதிகள் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது, இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய அரசாங்கத்திற்கு
ஆலோசனை வழங்கும் பொருட்டே இந்த குழு இலங்கை வருகின்றது.

இந்த விஜயத்திற்கு பல்வேறு அமைப்புக்களிடம் இருந்தும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தன.

எப்படியிருப்பினும் வெளி விவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் எமக்கு தகவல் தருகையில், மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருவதற்கு அரசாங்கம் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என தெரிவித்தார்.

மனித உரிமைக் குழுவின் பிரதிநிதிகள் நாட்டின் எந்த பகுதிக்கும் விஜயம் செய்வதற்கு உரிமையுள்ளது.

எனினும, அரசாங்கத்தின் இறையாண்மைக்கு அமைய பிரதிநிதிகள் செயல்பட வேண்டியது அவசியம் என அந்த பேச்சாளர் கூறிப்பிட்டார்.

இதனிடையே, நாட்டிற்கு வந்துள்ள பிருத்தானிய நாடாளுமன்ற குழுவினர், இன்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு உள்ள பிருத்தானிய நாடாளுமன்ற குழுவினர், முன்னர் யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல இடங்களுக்கும் விஜயத்தினை மேற்கொண்டதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply