பலஸ்தீனத்தின் கோரிக்கைக்கு ஐ.நா சபையில் அங்கீகாரம் கிடைக்கலாம்

தனிநாடாக அங்கீகரிக்குமாறு பலஸ்தீனம் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் கிடைக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

எனினும் அமைதி மற்றும் நாடு என்ற அந்தஸ்து போன்றவற்றில் பலஸ்தீனுடன் தமது நாடு நெருக்கமாக செயற்படமாட்டாதென ஐ.நாவிற்கான இஸ்ரேல் தூதுவர் கூறியுள்ளார்.

பலஸ்தீனத்திடம் இருந்து கைப்பற்றப்பட்டு, யூதக் குடியேற்றங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேற்குகரைப் பகுதியை பலஸ்தீன உரிமைகோரி வருகின்றது.

அத்துடன் இந்த பகுதிகளை இணைந்து தமது நாட்டை சுதந்திர நாடாக பிரகடனப்படுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீன பிரேரணையை முன்வைத்துள்ளது.

மேற்குகரை பகுதியில் யூதக் குடியேற்றங்களை நிர்மாணிப்பதை நிறுத்த வேண்மென பலஸ்தீன் வலியுறுத்தி வரும் நிலையில் இரு தரப்பு சமாதானப் பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply