சுதந்திர தினத்தன்று டெல்லியில் குண்டு வெடிக்கும்! ஈமெயிலால் பரபரப்பு
சுதந்திர தினத்தன்று டெல்லியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த பீகாரைச் சேர்ந்த ஒருவர் சதிதிட்டம் தீட்டியுள்ளதாக ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளர் சி.கே.மேத்யூ உள்பட பல மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு ஈமெயில் வந்துள்ளது.
மாகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த 1ம் திகதி இரவு அடுத்தடுத்து 4 இடங்களில் குறைந்த சக்தி கொண்ட குண்டுகள் வெடித்தன.
இதில் ஒருவர் காயம் அடைந்தார். உயிரிழப்பு எதுவுமில்லை. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளர் சி.கே. மேத்யூ உள்பட பல்வேறு மாநில தலைமை செயலாளர்களுக்கு அஜய் கஷ்யப் என்பவர் நேற்று ஒரு ஈமெயில் அனுப்பியுள்ளார்.
அந்த ஈமெயிலில் அவர் கூறியிருப்பதாவது,
வரும் 15ம் திகதி அதாவது சுதந்திர தினத்தன்று டெல்லியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த பீகாரைச் சேர்ந்த நபர் ஒருவர் சதித்திட்டம் தீட்டியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் அந்த ஈமெயிலில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளவர் குறித்த தகவல்களை தெரிவி்ததுள்ளார் என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஈமெயிலை அனுப்பியவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த இமெயில் கிடைத்ததையடுத்து மாநில மற்றும் மத்திய உளவுத்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply