ஏமன் தற்கொலைத் தாக்குதலில் 42 பேர் பலி

ஏமன் நாட்டின் தென் மாகாணமான அப்யானில் அல்குவைதா தீவிரவாத இயக்கத்தினர் நடத்திய தற்கொலை தாக்குதலில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

அப்யான் மாகாணம் ஜார் நகரில் இத்தற்கொலைப் படைத் தாக்குதல் நேற்று நிகழ்த்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் அல்குவைதாவுக்கு எதிராக அரசுப் படைகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் பழக்குடி இன தலைவர் அப்துலதீப் – அல் சயீத் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

ஏமன் – அமெரிக்க கூட்டுப் படைகள் அல்குவைதா முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி 4 பேரை கொன்ற அடுத்த ஒரு மணிநேரத்தில் இத்தற்கொலைப் படைத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதில் மொத்தம் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மே மாதம் முதல் ஏமனில் அல்குவைதா அமைப்புக்கு எதிராக அமெரிக்கப் படைகளும் ஏமன் ராணுவமும் இணைந்து தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply