பாக்கிஸ்தானின் பாதுகாப்பு செயலாளர் இலங்கை வருகிறார்
பாக்கிஸ்தானின் பாதுகாப்பு செயலாளர் லெப்டினன் ஜெனரல் அசீப் யாசின் மலிக் ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (07) இலங்கை வரவுள்ளார்.
அவர் எதிர்வரும் 11ம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை – பாகிஸ்தானுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் அவர் தனது விஜயத்தின் போது கூடிய கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்துள்ள ´சமாதானமும் அதன் நிலைப்பாடும்´ என்ற தொனிப் பொருளில் இடம்பெறவுள்ள மாநாட்டில் பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply