லஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் இறைச்சிக் கடைக்காரர்களால் நையப்புடைப்பு
1000 ரூபா லஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை இறைச்சிக் கடைக்காரர்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று (07) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
நற்பட்டிமுனையில் மாட்டு இறைச்சி வெட்டி கல்முனை மகளிர் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள இறைச்சி விற்பனைக் கடைக்கு சம்பவதினமான இன்று காலை 6.00 மணியளவில் முச்சக்கரவண்டியில் எடுத்துச் சென்றபோது குறித்த பாடசாலையில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு காவல் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் இறைச்சியை எடுத்துச்சென்ற முச்சக்கரவண்டியை நிறுத்தி இவ்வாறு இறைச்சியை எடுத்துவரமுடியாது என பயமுறுத்தி 10 ஆயிரம் ரூபா இலஞ்சமாக கேட்டுள்ளார்.
இதன்பின்னர் இறைச்சியை எடுத்துச் சென்றவர் ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக வழங்கியுள்ளார்.
இதனையடுத்து இறைச்சிக்கடைக்கு இறைச்சியை குறித்த நேரத்திற்கு பின்னர் எடுத்துச்சென்றுள்ள போது இறைச்சி விற்பனைக் கடை முதலாளி பிந்திவந்த காரணத்தை கேட்டபோது பொலிஸ் இலஞ்சம் வாங்கிய சம்பவத்தை கூறியதையடுத்து இறைச்சி விற்பனைக்கடை காரர்கள் உடனடியாக பாடசாலைக்குச் சென்று இலஞ்சம் வாங்கிய பொலிஸ் கான்ஸ்டபிளை மடக்கிபிடித்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
இவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இலஞ்சமாகப் பெற்ற ஆயிரம் ரூபாவையும் மீட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply