இலங்கைக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழர்கள் செயற்படுகின்றனர்

இலங்கையின் உறுதிபாட்டுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிராக செயற்படுவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

வெளியுறவு அமைச்சர் ஜீ எல் பீரிஸ் பங்களாதேஷில் நடைபெற்ற தெற்காசிய நோக்கு என்ற கருத்தரங்கில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இலங்கையில், மோதல்கள் இடம் பெற்ற காலப்பகுதியினுள், சிங்கள அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்ட அதேநேரம் தமிழ் அரசியல்வாதிகளும் தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பிரச்சினைக்கு தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே காணப்படும் கலாசார இடைவெளியே காரணமாகும்.

பொருளாதார ஏற்றதாழ்வுகள் இதற்கு காரணமல்லவென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply