அவுஸ்திரேலியாவிலுள்ள தமிழ் அகதிக்கு உதவுமாறு கோரிக்கை

அவுஸ்திரேலிய விலாவுட் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதி ஒருவருக்கு உதவுமாறு தடுப்பு காவல் அதிகாரிகள் ஒஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.

பிரதீப் என்ற பெயரை கொண்ட இந்த அகதி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவரின் சட்டத்தரணியும் சகோதரரும் தெரிவித்துள்ளனர்.

இது அவருக்கும் அவருடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் அரசாங்க அதிகாரிகள், இந்த அகதியை பராமரிப்பதில் பின்னடிப்பதாகவும் சட்டத்தரணி குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த இரண்டரை வருடங்களுக்குமுன்னர் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்த போதே குறித்த அகதி மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த அகதியுடன் அவரின் சகோதரர் உட்பட 51 பேர் விலாவுட் தடுப்பு முகாமில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கூறி தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply