கச்சத்தீவை மீட்க கடலில் இறங்கி போராடத் தயார்! விஜயகாந்த் அதிரடி
மீனவர்கள் ஆளும் கட்சிக்கு பயப்படாமல் ஒன்றுசேர்ந்து என்னோடு வந்தால் கச்சத்தீவை மீட்க கடலில் இறங்கி போராடத் தயாராக இருக்கிறேன், என தேமுதிக தலைவர் விஜயகாந்த் ராமநாதபுரத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.
தேமுதிக கட்சி சார்பில், ராமநாதபுரம் அரண்மனை முன்பாக நடைபெற்ற வறுமை ஒழிப்பு தின விழாவில் கலந்துகொண்டு, மாட்டு வண்டி மற்றும் முச்சக்கரவண்டி தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர் மேலும் பேசியதாவது:
இலங்கையில் போர் முடிவுற்ற பிறகும், இன்று வரை அந்நாட்டு கடற்படையின் அட்டூழியத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. முதல்வர் பிரதமருக்கும், பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதத்தான் செய்கிறார்களே தவிர, இலங்கை இராணுவத்தின் அத்துமீறல்களை தடுக்க முடியவில்லை.
கச்சத்தீவை மீட்டால்தான் தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கை மீறிக் கொண்டிருப்பதை மத்திய அரசு தட்டிக் கேட்கவே இல்லை. மீனவர்கள் என்னுடன் ஒற்றுமையாகவும், ஆளும் கட்சிக்கு பயப்படாமலும் வந்தால் கச்சத்தீவை மீட்கும் வரை போராடி அதனைத் திரும்பப் பெற்றுத்தர முடியும் என விஜயகாந்த் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply