அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முற்பட்ட மேலும் 68 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் கள்ளப்படகு மூலம் அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முற்பட்ட மேலும் 68 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி – கொஸ்கொட கடற்பரப்பில் வைத்து நேற்று (07) இரவு இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 61 பேர் தமிழர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனையோர் படகின் பணியாளர்களாவர்.  கைது செய்யப்பட்டவர்களில் இரு பெண்களும் அடங்குகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply