இம்மாதத்துடன் மீள்குடியேற்றம் நிறைவு!

யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் நடவடிக்கை இம்மாத நடுப்பகுதியில் நிறைவுறும் என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (08) ஆரம்பமான சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தில் 3 லட்சம் பொது மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் அவர்களில் இன்னும் 5,424 பேர் மாத்திரமே மீள்குடியேற்ற எஞ்சியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடன் வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வீடு பிரச்சினை உள்ளதாகவும் இராணுவத்தினர் வடக்கில் 7000 வீடுகளை அமைத்துள்ளதாகவும் அதில் 6000 வீடுகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் படையினரால் 19 பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 55 பாடசாலை கட்டடங்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும் வீதி அபிவிருத்திப் பணிகள் வடக்கில் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓமந்தை – பளை ரயில் வீதி அடுத்த வருடம் செப்டெம்பரில் நிறைவுறும் எனவும் 2014 ஜூன் காங்கேசன்துறை ரயில் வீதி அமைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply