நுரைச்சோலை அனல் மின்நிலைய உற்பத்திகள் மீண்டும் இடைநிறுத்தம்
மின்பிறப்பாக்கல் கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் உற்பத்தி நடவடிக்கைகள் மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இன்று காலை 6.58 தொடக்கம் இந்த நிலையேற்பட்டுள்ளதாக மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டமைப்பு நிர்வாக பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக நுரைச்சோலை அனல்மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து தேசிய மின்சார கட்டமைப்புக்கு சேர்க்கப்படும் 300 மெகாவோட் மின்சாரம் கிடைக்கப் பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும்இ துரிதமாக அதனை மீளமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply