அநுராதபுரம் சிறைச்சாலை காவலாளிகள் கைது

அநுராதபுரம் சிறைச்சாலையின் காவலாளிகள் அறுவர் மஹவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் – குருநாகல் வீதியின் தலதாகம பகுதியில் பஸ் சாரதி மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பஸ்ஸை நிறுத்தாததன் காரணமாக சிறைச்சாலை காவலாளிகள் சாரதி மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

சுப நிகழ்வொன்றுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த இவர்கள் மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட காவலாளிகள் மஹவ பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply