முன்னாள் போராளிகள் 383 பேர் விசாரணைகளுக்கு காத்திருக்கின்றனர்
இலங்கையில் இன்னும் 383 முன்னாள் போராளிகள் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமாதானத்தை இறுதிப்படுத்தலும், நிலைகொள்ள செய்யலும் என்ற தொனிப்பொருளில் அமைந்த பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் புனவர்வாழ்வளிப்பு நடவடிக்கைகளை வெகு விரைவில் நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த 2009ம் ஆண்டு முதல் இதுவரையில் 51 ஆயிரத்து 400 வெளிநாட்டினர் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply