தமிழகத்தில் இலங்கை வான்படையைச் சேர்ந்த எவருக்கும் பயிற்சி வழக்கவில்லை

தமிழகத்தில் இலங்கை வான்படையைச் சேர்ந்த யாரும் பயிற்சி பெறவில்லை என இந்திய ராஜ்யசபையில் வைத்து, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் இலங்கை வான்படையினருக்கு பயிற்சி வழங்கப்படுவதற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பினை வெளிக்காட்டின.

இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக் காலங்களில் 15 இலங்கை வான் படையினர் தமிழகத்தில் உள்ள தாம்பரம் வான்படை முகாமில் பயிற்சி வெற்றி வந்தனர்.

எனினும் அவர்கள் தற்போது பெங்கள10ருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இனிவரும் காலங்களிலும் இலங்கை பாதுகாப்பு தரப்பை சேர்ந்த யாருக்கும் தமிழகத்தில் பயிற்சிகள் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply