வரட்சியின் அகோர பிடிக்குள் 20 ஆயிரம் பேர் சிக்கினர்!
வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 20,000 செய்கையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.
எதிர்காலத்தில் பாதிக்கப்பட்ட செய்கையாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட செய்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சுமார் 10,000 மில்லியன் ரூபா செலவாகும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
வடமேல், வடமத்திய மாகாணங்களில் பாதிக்கப்பட்ட செய்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனரத்த முகாமைத்துவ அமைச்சர் தெரிவித்தார்.
கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையின் மூலம் உடனடியாக 6,000 ரூபாவுடன் இவிதை நெல், உரம் மற்றும் இழப்பீடு ஆகியன வழங்கப்படவுள்ளன.
கடந்த மாதம் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் பாதிக்கப்பட்ட செய்கையாளர்களுக்காக சுமார் 3,765 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply