உலகளாவிய ரீதியில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு
உலகளவில் உணவு தானியங்கள் மற்றும் சர்க்கரையின் விலை ஜூலை மாதம் கடுமையாக உயர்ந்துள்ளதாக ஐ நா வின் அமைப்பு ஒன்று கூறியுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் கோதுமை, சோளம், கம்பு, போன்ற பல தானியங்களின் விலை 17 சதவீதம் உயர்ந்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பான FAO தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் ஏற்பட்ட வறட்சி மற்றும் ரஷ்யாவில் ஏற்பட்ட உற்பத்தி பிரச்சினைகளாலேயே இந்தக் கடுமையான விலையேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
பிரேசிலில் கரும்பு விவசாயம் பாதிப்பு
உலகின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தி நாடான பிரேசிலில் மழை கரும்பு விவசாயத்தை பாதித்த காரணத்தால், சர்க்கரையின் விலையும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது.
எனினும் அரிசியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
குறிப்பிட்ட இந்த தானியங்கள் மற்றும் சர்க்கரை மட்டுமல்லாமல், உலகளவில் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் சராசரியாக ஆறு சதவீதம் உயர்ந்தது.
ஆனாலும் கடந்த ஆண்டு பெப்ரவரி மாத உணவுப் பொருட்களின் விலையேற்றத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது, கடந்த ஜுலை மாதத்தில் அது குறைவாகவே இருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply