புகலிடக் கோரிக்கையாளர்கள் 211 பேர் அவுஸ்திரேலியாவில் தஞ்சம்

இலங்கையர்கள் உள்ளிட்ட சுமார் 211 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்றை இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து அவுஸ்திரேலிய கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இந்த படகு கடந்த புதன்கிழமை கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அருகில் வைத்து மீட்கப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவன் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

குறித்த படகில் இலங்கை, ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாட்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

108 படகுகளில் 7,364 புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வருடத்தில் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply