வர்த்தகரிடம் பணம் கேட்டு வற்புறுத்திய பிரதி அமைச்சருக்கு எதிராக வழக்கு
வர்த்தகர் ஒருவரிடம் இரண்டரை கோடி ரூபா பணம் கேட்டு அழுத்தம் கொடுத்ததாக தெரிவித்து கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றின் நிர்மாணப் பணிகளை தடையின்றி மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக குறித்த பணம் கோரப்பட்டதாக தொடர்மாடி குடியிருப்பு தொகுதியின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.
இதில் 50 இலட்சம் ரூபா பிரதி அமைச்சருக்கு வழங்கப்பட்டதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதி அமைச்சர் சரண குணவர்த்தனவிடம் நாம் வினவியபோது தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிப்பதாக கூறினார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களிடம் இருந்து முறையாக அனுமதி பெறாமலேயே தொடர்மாடி குடியிருப்புத் தொகுதி நிர்மாணிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply