இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் இந்திய பாராளுமன்றத்தில்
இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து அடுத்த வாரம் இந்திய நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் ஒன்று நடைபெறவுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சித் திட்டத்தில் இந்த விவாதத்துக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக, இந்திய இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் வாரம் திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்பாடு செய்துள்ள தமிழீழ ஆதரவாளர்களின் மாநாடு நடைபெறவுள்ளது.
இது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தும் என்பது குறித்து, இந்த விவாதத்தின் போது முக்கிய அவதானம் செலுத்தப்படும் என கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கையில் யுத்த பாதிப்புக்கு உட்பட்ட தமிழர்களின் வாழ்க்கை சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இதன் போது விவாதிக்கப்படவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply