ஈழத் தமிழின் காலவரையற்ற உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கருணாநிதி கோரிக்கை

லண்டனில் ஈழத் தமிழர் நிலைமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் ஒம்பிக் பூங்கா முன்பு ஈழத் தமிழரான கோபி சிவந்தன் மேற்கொண்டு வரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழ மக்களின் உரிமைகளுக்காகவும், மறு வாழ்விற்காகவும், உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய இத்தருணத்தில், விலை மதிப்பில்லா உயிரைக் காப்பாற்ற உண்ணாவிரதத்தை கைவிட்டு வேறு அறவழிகளில் அனைவருடனும் இணைந்து செயல்களில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply